| ADDED : ஜூன் 09, 2024 02:21 AM
மதுரை : மதுரையில் இந்திய தரநிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.,) சார்பில் தரநிலை மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, 'நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்கள்' என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்தது.இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூடடுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிகாரிகள், பல்வேறு ஆய்வகங்களின் பிரதிநிதிகள், மதுரைமங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லுாரி மணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்களின் ஊட்டச்சத்து உலகளவில் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. இவை பல நாடுகளில் ஆரோக்கிய உணவாக உள்ளன. லஸ்ஸி, மோர் என பல பெயர்களில் சந்தையில் கிடைக்கின்றன. இப்பானங்களுக்கான தேவை, சோதனை முறையில் உற்பத்தியாளர்களுக்கு உதவிட இந்த தரநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரவேற்ற மூத்த இயக்குனர் தயானந்த், நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்தும், நிலையான வளர்ச்சி இலக்குகள்,இந்திய தரநிலைகளில் அதன் பொருத்தம் பற்றிய விவரங்கள் குறித்து பேசினார்.துணைப் பொது மேலாளர் ரபி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆவின் உதவிப் பொதுமேலாளர் ஹனுமந்தராவ் உட்பட பலர் பேசினர்.