| ADDED : ஜூன் 11, 2024 06:48 AM
மதுரை : மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை ரத்து செய்தல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், ஒப்பந்த பணியிடங்களை நிரப்புவதை கைவிடல், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா பேசுகையில், ''தேர்தலில் அதிகப்படியான தபால் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு செல்லவேண்டிய 90 சதவீத அரசு ஊழியர்களின் ஓட்டுகள் அதிருப்தியால் எதிர்க்கட்சிகளுக்கு சென்றுள்ளன. இது தி.மு.க.,வுக்கான எச்சரிக்கை மணி. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 3 ஆண்டுகளாக ஆட்சி புரிகின்றனர்'' என்றார்.மாநில பொருளாளர் தமிழ், பாண்டிச்செல்வி, பஞ்சவர்ணம், கிருஷ்ணன், பரமசிவன், ஜெயபாலன், சந்திரபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.