டிட்டோ ஜாக் பிரசாரம்
உசிலம்பட்டி ; தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பில், பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.10ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பிரசாரத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் துவக்கி வைத்தார். வட்டாரப் பொறுப்பாளர்கள் மரியசெல்வம், ராஜன், செல்வம், ராசாங்கம், கவுசல்யா, அன்பழகன் பங்கேற்றனர்.