| ADDED : மே 26, 2024 04:21 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2023 -- 24ம் கல்வி ஆண்டில் பட்டயம், முதுகலை பட்டயம், யோகா படிப்பு படித்த மாணவர்களின் பிரிவு உபசார விழா நடந்தது. முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். யோகா ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரன், நந்தினி, பொன்மணி, பிரேமலதா, பழனிகுமார், லோக பிரியா, மணிமாறன், அனுராதா பங்கேற்றனர். மாணவர்கள் மணிகண்டன், சிவநாதன், சுரேஷ், ஜெயசித்ரா, ஜெயப்பிரியா, கண்ணன், சரவணன், பிரேம்குமார் ஏற்பாடுகளை செய்தனர். மியூசிய பொருளாளர் செந்தில்குமார், காப்பாட்சியர் நடராஜன் உடனிருந்தனர்.