மேலும் செய்திகள்
மாணவன் பலி
9 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
9 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
9 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
9 hour(s) ago
மதுரை : வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆகாயத்தாமரை கொடிகள் மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் பகுதியில் ஆக்கிரமித்துஉள்ளதை மாநகராட்சி அகற்ற வேண்டும்.வைகையாறு நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆற்றில் ஆங்காங்கே குடியிருப்புகளின் ஒட்டுமொத்த கழிவுநீரையும் மாநகராட்சி விடுகிறது. ஆரப்பாளையம் அருள்தாஸ்புரம் பகுதியில் இரண்டாண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டிய பகுதியில் செல்லுார் குடியிருப்பு கழிவுநீர் விடப்பட்டதால் அப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்தது. கழிவுநீரால் தான் ஆகாயத்தாமரை படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது என தெரிந்திருந்தாலும், மாநகராட்சி அதை அகற்றுவதே இல்லை. மாநகராட்சியில் போதுமான கருவிகள், பணியாளர்கள் இருந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நீர்வளத்துறையே வாடகைக்கு கருவிகளை பெற்று ஆகாயத்தாமரையை அகற்றி சுத்தம் செய்கிறது.தற்போது ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றில் 3000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஆரப்பாளையம் தடுப்பணையைச் சுற்றி படர்ந்திருந்த ஆகாயத்தாமரை கொடிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு சிம்மக்கல் தரைப்பாலத்தில் ஒதுங்கி நிற்கிறது. மே 26 வரை தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால் ஆகாயத்தாமரையை அகற்றினால்தான் தண்ணீர் தடையின்றி செல்லும். இல்லாவிட்டால் மீண்டும் மழை பெய்யும் போது அந்த கொடிகள் வைகை கரை ரோடு வரை படர்ந்து அடைப்பதற்கும் வாய்ப்புஉள்ளது. வைகை ஆற்றுக்குள் கழிவுநீர் விடுவதை மாநகராட்சி நிரந்தரமாக நிறுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago