உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்னணு விசா உள்ளவர்களுக்கு அந்தமான் வழியாக வர அனுமதி

மின்னணு விசா உள்ளவர்களுக்கு அந்தமான் வழியாக வர அனுமதி

போர்ட் பிளேர்: வெளிநாட்டவர்கள், விமான நிலையங்கள் வாயிலாக நாட்டுக்குள் வருவதற்கும், சில குறிப்பிட்ட துறைமுக நகரங்கள் வழியாகவும் வருவதற்கும் அனுமதிக்கப்படுகிறது.இதன்படி, இதுவரை மஹாராஷ்டிராவின் மும்பை, கேரளாவின் கொச்சி, கோவாவின் மர்முகோவா, தமிழகத்தின் சென்னை, கர்நாடகாவின் நியூ மங்களூரு ஆகிய ஐந்து துறைமுக நகரங்களில் துறைமுகங்கள் வழியாகவும், மின்னணு விசா வைத்துள்ள வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது இப்பட்டியலில், அந்தமான் - நிகோபரின் போர்ட் பிளேர் இணைந்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.இதனால், அந்தமான் - நிகோபரில் சுற்றுலா வளர்ச்சி அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை