| ADDED : ஜூன் 07, 2024 06:23 AM
மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் 1965ல் காமராஜரால் துவக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்துடன் 'ஏ' கிரேடு பெற்றது. இக்கல்லுாரியின் தலைவராக ஏ.எம்.எஸ்.ஜி., அசோகன், துணைத் தலைவர் டி.ஏ.பொன்னுச்சாமி, செயலாளர் ஆர்.சுந்தர், இணைச் செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் டி.நல்லதம்பி ஆகியோர் உள்ளனர். இங்கு புதிய பிரிவுகளுடன் துவக்கப்பட்ட பி.எஸ்சி., பி.காம்., எம்.எஸ்சி., மற்றும் எம்.பி.ஏ., உள்ளிட்ட 12 முதுநிலை படிப்புகளுடன் முனைவர்ஆய்வு மையம், சான்றிதழ், பட்டய படிப்புகளும் உள்ளன. வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் பாடத்திட்டம், பயிற்சி பட்டறைகள், மதிப்புக்கூட்டும் சான்றிதழ் வகுப்பு, திறமையான பேராசிரியர்களின் வழிகாட்டுதல்கள் இக்கல்லுாரியின் சிறப்பு. கணினிமயமாக்கப்பட்ட நுாலகம், சர்வதேச இதழ்கள், மாணவர்களின் ஆய்வுக்கும், திட்டப்பணிகளுக்கும் தேவையான கட்டமைப்புடன் கல்விச்சேவை புரிகிறது.