உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

மதுரை: மதுரையில் மீன்வளத்துறை, மீனவர் நலத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீன்வள உதவியாளர், ஊர்தி ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1:5 என்ற வீதத்தில் பதிவு செய்தோர் பட்டியலைப் பெற்று தகுதியானோரையும் சேர்த்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு ஆதிதிராவிடர் அருந்ததியர் ஆதரவற்ற விதவை முன்னுரிமை என்ற இனச்சுழற்சி அடிப்படையில் நீச்சல், வீச்சுவலை வீசுதல், வலைபின்னுதல் தகுதிகளுடன் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். ஓட்டுனர் பணியிடத்திற்கு இலகுரக பொது போக்குவரத்து வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.1.1.2024 ன்படி வயது 37 க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் பெயர், முகவரி, குடும்ப அட்டை, அடையாள அட்டை, ஜாதிச்சான்று, கல்வி, வயது, முன்னுரிமை சான்றுகளுடன் ஜூலை 2க்குள், 'துணை இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த வளாகம், முதல் தளம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை-1' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 0452- 238 5900 ல் விவரம் பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி