| ADDED : ஜூன் 07, 2024 06:28 AM
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரியில் சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. மண், சுற்றுச்சூழல் துறைத்தலைவர் ஷீபா வரவேற்றார். வேளாண் கல்லுாரி, சமுதாய அறிவியல் கல்லுாரி டீன்கள் மகேந்திரன், காஞ்சனா தலைமை வகித்தனர். லெப்டினன்ட் கர்னல் சிவக்குமார் சுற்றுச்சூழல் தின முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லுாரி வளாக திரவ உர உற்பத்தி மையப்பகுதியில் மாணவர்கள் மூலம் அடர்வனமாக்குவதற்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. பேராசிரியர்கள் சரவணபாண்டியன், கிறிஸ்டி நிர்மலாமேரி, இணைப்பேராசிரியர்கள் ஜெயபாலகிருஷ்ணன், பிரபாகரன், உதவி ஆசிரியர் முருகராகவன் ஏற்பாடுகளை செய்தனர்.வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வகித்தார். மதுரை டி.இ.ஓ., சாய்சுப்புலட்சுமி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் சிவசங்கர் பேசினர். மாணவர்களுக்கு மஞ்சள் துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டப்பட்டன. மரங்கள் குறித்து மாணவர்கள் அறிய கியூ.ஆர்., கோடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியைகள் முத்துலட்சுமி, சுனிதா ஏற்பாடு செய்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.