உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

திருப்பரங்குன்றம்: போதுமான மழை பெய்தால் மட்டுமே நெல் நடவு பணிகளை துவக்க மானாவாரி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தை சுற்றி வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி உள்பட 10க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. கனமழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். இக்கண்மாய் தண்ணீர் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்தாண்டு பருவ மழை தாமதமாவதால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் அப்பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர்உள்ள விவசாயிகள் மட்டும் நெல் நடவு ஆயத்த பணியை துவக்கி உள்ளனர். கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், ''சரியான நேரத்தில்மழை பெய்திருந்தால் நெல் நடவு செய்து இருப்போம். கடந்தமாதம் பெய்த மழையை நம்பி நடவுப் பணிகளை துவக்க முடியாது. போதிய மழை பெய்யவில்லை எனில் இந்தாண்டு நெல் பயிரிட முடியாது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை