| ADDED : ஜூலை 26, 2024 06:29 AM
மதுரை: மதுரை அரசரடி யு.சி., பள்ளி மைதானத்தில் ஜெமினி சர்க்கஸ் துவங்கியது.மேலாளர் டைடஸ் வர்கீஸ் கூறியதாவது: நாடு முழுவதும் சர்க்கஸ் நடத்திக் கொண்டு வருகிறோம். மதுரையில் இதுவரை 12 முறை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். முன்பு மதுரையில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிங்கம், யானை, கிளி, சிம்பன்ஸி விலங்குகள் மக்களை மகிழ்வித்தன. 1999ல் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஆண்டுதோறும் புதுமைகளை புகுத்தி மக்களை ஈர்த்து வருகிறோம்.இம்முறை ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டு கலைஞர்கள் தங்கள் திறமைகளை காட்ட உள்ளனர். ரஷ்யா, சீனாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு படிப்பும், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதுபோல் இந்திய கலைஞர்களுக்கும் அளிக்க அரசு முன்வரவேண்டும். சர்க்கஸில் ரிங் ஆப் டெத், பார் விளையாட்டு, சைக்கிளில் சாகசங்கள், ஆப்ரிக்கன் பயர் டான்ஸ், கூண்டுக்குள் பைக் சாகச நிகழ்ச்சிகள் மக்களை கவரும். தினமும் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணிக்கு காட்சிகள் நடக்கும். கட்டணம் ரூ.150, ரூ.200, ரூ.250, ரூ.350. முன்பதிவுக்கு 63524 19244, 82814 84808 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார். துணை மேலாளர் திவாகர், முருகன், மோகன்குமார் உடனிருந்தனர்.