உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் காப்பீட்டுத் திட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில நிர்வாகி மாரியப்பன், ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கல்யாணசுந்தரம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகி சரவணன், கால்நடை பராமரிப்பு துறை முருகையன், சுகாதார போக்குவரத்து பிரிவு அமுதா, டான்சாக் நிர்வாகி மணிக்கண்ணன், நெடுஞ்சாலைத்துறை வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.தனியார் காப்பீட்டு நிறுவனம் 80 சதவீதத் தொகை வழங்கும் நிலையில், வரும் ஜூலையில் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும் முன் அரசு ஊழியர்கள் விருப்பத்தைக் கோர வேண்டும். மோசடியில் ஈடுபடும் காப்பீடு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ