ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை வ.உ.சி.நகர் குடியிருப்போர் நலச் சங்கம் செயலாளர் சிவநாராயணபாண்டியன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை யாதவா ஆண்கள் கல்லுாரி எதிரே எங்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இவ்வழியாக செல்லும் பெரியாறு பிரதான கால்வாயின் 5வது கிளை கால்வாய் சிறுதுார் சின்னகண்மாயை அடைகிறது. கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்துவிடுகிறது. கலெக்டர், நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர், மதுரை வடக்கு தாசில்தாருக்கு புகார் அனுப்பினோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:கால்வாயை தாசில்தார் அளவீடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். ஆக்கிரமிப்பு உறுதியாகும்பட்சத்தில் அகற்ற 4 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.