உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக கடந்தாண்டு சட்டசபையில் அரசு அறிவித்தது. 12 ஆயிரத்து 291 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளை இந்த ஆணையத்திடம் வழங்கினால் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயரும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். சுங்கச்சாவடி தனியார் வசம் சென்றால் சாலை பராமரிப்பு, புதிய சாலை அமைப்பது இருக்காது. எனவே நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஊழியர்கள் கோஷமிட்டனர்.மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். செயலாளர் அன்புசெல்வம் கோரிக்கைகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சின்னபொன்னு துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் முனியசாமி, வைரவன், லட்சுமணன், மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !