உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருமான வரித்துறை பெண்கள் சங்கம் உதவி

வருமான வரித்துறை பெண்கள் சங்கம் உதவி

மதுரை : வருமான வரித்துறை தினத்தையொட்டி மதுரை வருமான வரித்துறை பெண்கள் நலச்சங்கத்தினர் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், கல்வி, சுகாதாரம் குறித்த ஆலோசனை வழங்கினர்.சக்கிமங்கலம் எல்.கே.பி., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் மாதுரி முன்னிலை வகித்தார். உதவிச் செயலாளர் கிருத்திகா, பொருளாளர் டெய்சி, உதவி பொருளாளர் ஜோஷிமகதி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு உளவியல் துறை பேராசிரியர் சுரேஷ்குமார் முருகேசன் மனநல ஆலோசனை வழங்கினார். மேலும் கல்வி பயில்வது, சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம் குறித்து பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு ட்ரை புரூட்ஸ், சத்துபானம் உட்பட ஆரோக்கிய உணவுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ