உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சி

மதுரை: திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு புத்தாக்க, ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.முதல்வர் வசந்தி வரவேற்றார். பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் மனோகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் துவக்கி வைத்தனர். துணைப்பதிவாளர்கள் சுரேஷ், பாலசுப்பிரமணியன், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் கேசவன் கலந்து கொண்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் தீனதயாளன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ