உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெங்காயத்தை காக்க காப்பீடு

வெங்காயத்தை காக்க காப்பீடு

திருமங்கலம் : கள்ளிக்குடி, குராயூர், சிவரக்கோட்டை பிர்க்காக்களில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயிர்க்கடன் பெற்ற, பெறாத, குத்தகை சாகுபடி விவசாயிகள் அனைவரும் பயனடையலாம். இதற்கு பயிர் செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை நகலுடன் இ-சேவை மையங்கள், கூட்டுறவு சொசைட்டியில் பயிர் காப்பீடு செய்யலாம். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்து 750 நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 815 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆக., 31 கடைசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ