உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச நோட்டுகள் வழங்கல்

இலவச நோட்டுகள் வழங்கல்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ். ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் லேபர் பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் நாகசுப்பிரமணியன் வரவேற்றார். மதுரை தொழிலாளர் சங்க தலைவர் சுரேந்திரன், மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினார். பேராசிரியர் ஜெயக்குமார், பென்னர் தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் ஈஸ்வரன், மக்கள் நல மையம் தலைவர் செல்வராஜ் பேசினர். தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், மன்ற நிர்வாகிகள் வேட்டையார், பாஸ்கர்பாண்டி, அரவிந்தன் கலந்து கொண்டனர். மன்ற பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி