உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கப்பலுாரில் கப்பம் நேற்றும் அடாவடி

கப்பலுாரில் கப்பம் நேற்றும் அடாவடி

திருமங்கலம் : திருமங்கலம் சற்குணம். இவரது சென்னை பதிவெண் காரை உறவினர்களோடு நேற்று செங்குளம் ராஜபாண்டி மதுரைக்கு ஓட்டிச்சென்றார். கப்பலுார் டோல்கேட்டில் ஆவணங்களை காட்டிய போதும் கார் ஆவணங்கள் திருமங்கலம் முகவரியில் இல்லை எனக்கூறி ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். காரில் கைக்குழந்தையோடு உறவினர்கள் நீண்ட நேரம் டோல்கேட்டில் காத்திருந்தனர். போலீசார் தலையிட்டு ஒருமணி நேரத்திற்கு பிறகு காரை அனுப்பிவைத்தனர்.விதிமீறி அமைக்கப்பட்டுள்ள இந்த டோல்கேட்டை அகற்றக்கோரி ஏப்.,16ல் திருமங்கலத்தில் கடையடைப்பு, டோல்கேட் முற்றுகை நடந்தபோதிலும் 'உள்ளூர் வாகன பதிவெண் இல்லை' எனக்கூறி ஊழியர்கள் தகராறு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ