உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி

வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி

மதுரை : மதுரை வழக்கறிஞர் ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக வழக்கறிஞர்கள் நல முத்திரைக் (ஸ்டாம்ப்) கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தி சட்டத்துறை செயலர் அரசாணை வெளியிட்டார். அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ரத்து செய்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு:வழக்கறிஞர்கள் நல நிதி அவர்களின் நலனிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இம்மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி