| ADDED : ஜூலை 03, 2024 05:55 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை எக்கோ லயன் சங்கம் சார்பாக வட்டார கூட்டம் நடந்தது.வாடிப்பட்டி லயன் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், வட்டார தலைவர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், சிவக்குமார் மோகன்காந்தி, ரகுபதி முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.அலங்காநல்லுார், நிலக்கோட்டை சங்கங்களில் சிறப்பாக சேவை செய்த 4 சங்க நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.மாவட்ட தலைவர்கள் குருசாமி, குணசேகரன், பாபு சரவணன், சிவசங்கர், உதவி தலைவர் பொன் கமலக்கண்ணன், இளங்கோ, சர்க்கார், சுந்தரேசன், அலங்காநல்லுார் சங்க தலைவர் தயாளன், பொருளாளர் கண்ணன் நிலக்கோட்டை மலர் நகர் அரிமா சங்க நிர்வாகிகள், மதுரை எக்கோ லயன்ஸ் சங்க செயலாளர் ஜெயக்குமார் மதுரை விக்டரி லயன் சங்க தலைவர் தாஸ் திருமங்கலம் ஜெயம் லயன்ஸ் தலைவர் மூர்த்தி பங்கேற்றனர்.