உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா

தேசிய போட்டியில் மதுரை ஆரண்யா

மதுரை: திருநெல்வேலியில் தமிழ்நாடு மாநில 7 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த கோல்டன் நைட்ஸ் செஸ் அகாடமி மாணவி ஆரண்யா பங்கேற்றார். 9 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மைசூருவில் அடுத்த மாதம் நடக்க உள்ள தேசிய 7 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இம்மாணவி சமீபத்தில் இலங்கையில் நடந்த மேற்கத்திய ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ