உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்கு சிறப்பு வார்டு

மதுரை அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்கு சிறப்பு வார்டு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.நகர் பா.ஜ., தலைவர் மகாசுசீந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துக்குமார் அளித்த மனு: மதுரை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் அடிக்கடி வெளியே வீசிசெல்லும் செயல் நடக்கிறது.அவர்கள் மழை, வெயிலால் பாதித்து தொற்று நோய் கிருமிகள் தாக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இவர்களைப் போன்றோர் சிகிச்சை பெற தனி வார்டு ஏற்படுத்தி, பராமரிக்க ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. செயலற்ற நிலையில் உள்ளது. அந்த வார்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும், என தெரிவித்திருந்தனர். தமிழ் மாநில காங்., மாவட்ட தலைவர் ராஜாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் அளித்த மனு:தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பல்வேறு வரிகளை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மின்கட்டண உயர்வால் சிறு, குறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் உட்பட பலரும் பாதித்துள்ளனர்.எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைசொல்லாமல், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மரபுசாரா எரிசக்தி, காற்றாலை, சூரிய ஒளி மின்சக்தியை ஊக்குவிக்க வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.தமிழர் கட்சி மாநில தலைவர் தீரன்திருமுருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் அளித்தமனு: சில ஆண்டுகளுக்கு முன் மதுரை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப் பணிக்காக அங்கிருந்த இரட்டை மீன்சிலை அப்புறப்படுத்தப்பட்டது. பணிகள் முடிந்தபின், மீண்டும் பழைய இடத்தில் மீன்சிலையை நிறுவ ஐகோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. மீன்சிலையை உடனே நிறுவ வேண்டும், என தெரிவித்திருந்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு சார்பில் வனவிலங்குகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும் எனக்கோரி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில துணைத் தலைவர் முகமதுஅலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை