உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மே தின கொண்டாட்டம்

மதுரை மே தின கொண்டாட்டம்

மதுரை: மதுரை அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க அலுவலகத்தில் மே தினக்கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கண்ணன் ஒச்சாத்தேவன், வீரப்பெருமாள், சவுந்திரராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார்.பொதுச்செயலாளர் ஷாஜஹான் 8 மணிநேர பணிக்காக போராடியவர்களுக்கு அஞ்சலி, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை விளக்கினார்.

மேலுார்

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மலை கண்ணன், மேலுார் வட்ட பொது தொழிலாளர் சங்கச் செயலாளர் சேகர், நிர்வாகி கோபால் உள்ளிட்டோர் பல இடங்களில் கொடியேற்றினர். நிர்வாகிகள் ஹனீபா, பெருமாள், முருகேசன் பங்கேற்றனர்.

அலங்காநல்லுார்

மின் அமைப்பாளர் நலச் சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. முனியாண்டி கோயிலில் வழிபாடுகள் செய்து ஊர்வலமாக வந்தனர். சங்க பெயர் பலகையை சீனிவாசன் திறந்து வைத்தார். கொடியினை கவுரவ ஆலோசகர் ராயல் ஏற்றினார். கவுரவ தலைவர் அலிமுதீன், உறுப்பினர்கள், இனிப்பு வழங்கினார். தலைவர் ரவி தலைமையில் சங்கக் கூட்டம் நடந்தது. செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ஆறுமுகம், பலராமன், ஜெயபிரகாஷ், வெடிமுத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை