உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மே மாத பருப்பு, எண்ணெய் பாக்கி ஜூனில் எதிர்பார்க்கும் நுகர்வோர்

மே மாத பருப்பு, எண்ணெய் பாக்கி ஜூனில் எதிர்பார்க்கும் நுகர்வோர்

மதுரை : மதுரையில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் எண்ணெய் குறைந்தளவே கடைகளுக்கு வழங்கப்பட்டதால் நுகர்வோர் ஏமாற்றமடைந்தனர்.நுகர்வோர் கூறியதாவது: மார்க்கெட்டில் துவரம்பருப்பு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரையும் பாமாயில் லிட்டர் ரூ.100க்கு மேலும் விற்பனையாகிறது.மாதந்தோறும் ரேஷன் கடையில் கிடைக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய்யும் எங்கள் வீட்டு மாதத்தேவையில் மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்டிவிடும். இந்த வாரம், அடுத்த வாரம் என வாரந்தோறும் கடைக்கு சென்றாலும் இந்த மாதத்திற்கான பருப்பும் எண்ணெய்யும் இன்னும் கிடைக்கவில்லை. மே மாத நிலுவையை ஜூனில் சேர்த்து வழங்க வேண்டும் என்றனர்.கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தியிடம் கேட்டபோது,''நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து மே மாதத்திற்கு 34 சதவீத அளவே துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுள்ளோம். இதனால் நுகர்வோருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்குள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்வோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ