உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாயம், பல்லாங்குழி விளையாடலாமா

தாயம், பல்லாங்குழி விளையாடலாமா

மதுரை: மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் மே 18 உலக மியூசிய தினத்தை முன்னிட்டு மே 11 முதல் 16 வரை சிறியவர், பெரியவர்களுக்கு பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது:மே 11 காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை பல்லாங்குழி, 12 ல் தட்டாங்கல், 13 ல் தாயம், 14 ல் நொண்டி, 15 ல் கிட்டிப்புல், 16 ல் கோலிக்குண்டு போட்டிகள் நடத்தப்படும். வயது வரம்பின்றி ஆண், பெண்கள் பங்கேற்கலாம். சிறியவர்களுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவருக்கு ரூ.100 கட்டணம் உண்டு. போட்டியன்று விதிமுறை அறிவிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 97900 33307 ல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை