மதுரை: மதுரை மாநகராட்சி ரோடுகள் சீரமைப்பு, குடிநீரில் கழிவு நீர் கலப்பு புகார்களுக்கு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.மண்டலம் 4க்குட்பட்ட வார்டுகளில் ரோடுகள் சீரமைப்பு, பாதாளச் சாக்கடை செயல்பாடு, குடிநீர் வினியோக பணிகளை மேயர், கமிஷனர் ஆய்வு செய்தனர்.செல்லுார் திருவாப்புடையார் கோயில், மேலத்தோப்பு, கீழத்தோப்பு, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட், ஆழ்வார்புரம், வைகை வடகரை ரோடுகள், காமராஜர் ரோடு, தெப்பக்குளம், பங்கஜம் காலனி, வைகை தென்கரை, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளின் சீரமைப்பு பணிகள், குப்பை அகற்றுதல், குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்த உத்தரவிட்டனர்.அவர்கள் கூறுகையில், ரோடுகள் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சாணக் கழிவுகள், தெருக்களில் வீசப்படும் குப்பையால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகின்றன.பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதை முறைப்படுத்த வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பு புகார்கள் குறித்து அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.எம்.எல்.ஏ., பூமிநாதன், மண்டல தலைவர் முகேஷ்சர்மா, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவிப்பொறியாளர்கள் சந்தனம், கந்தப்பா, சர்புதீன், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.