உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில அளவில் மேலுார் அரசு மருத்துவமனை முதலிடம்

மாநில அளவில் மேலுார் அரசு மருத்துவமனை முதலிடம்

மேலுார்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 2023--24ம் ஆண்டிற்கான காயகல்ப் ஆய்வில் மேலுார் அரசு மருத்துவமனை மாநில அளவில் முதலிடத்தை பெற்றது.இதை தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்தி தலைமையில் டாக்டர்கள், பணியாளர்கள் கொண்டாடினர். பொறுப்பு அலுவலர் டாக்டர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஜெயந்தி கூறுகையில், ''இத்திட்டத்தின் கீழ் துாய்மை, சுகாதாரம், நோய் தடுப்பு முறைகள், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற துாய்மை மற்றும் சுற்றுப்புறச் சூழல் குறித்த ஆய்வு நடந்தது. அதில் இம்மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் மற்றும் மகப்பேறு பிரிவில் லக் ஷயா தரச்சான்றிதழ் கிடைத்தது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை