உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக்க 27 பணிகள் நடக்க உள்ளன அமைச்சர் வேலு தகவல்

மதுரையில் தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக்க 27 பணிகள் நடக்க உள்ளன அமைச்சர் வேலு தகவல்

மதுரை: 'மதுரை மாவட்டத்தில் தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக்கும் 27 பணிகள் நடக்க உள்ளது. மேம்பால பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிவடையும்' என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.மதுரையில் நேற்று பாலப்பணிகளை ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது: மதுரை பகுதியில்3 ஆண்டுகளில் 212 பணிகள் ரூ.515 கோடியில் 289 கி.மீ.,க்கு பராமரிப்பு மேற்கொண்டதில் 200 பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டில் ரூ.111 கோடியில் 30 கி.மீ.,க்கு பணிகள் செய்யப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக்கும் 27 பணிகள் நடக்க உள்ளது. நடப்பாண்டில் ரூ.141 கோடி மதிப்பில் 111 கி.மீ., க்கு சாலைகள் பணிகள் முடிந்துள்ளன. 25 ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த ரூ.56.60 கோடியில் 40 கி.மீ.,க்கு டெண்டர் கோரப்பட்டுஉள்ளது.மேலமடை பாலம் 1100 மீ.,க்கு 28 துாண்களுடன் ரூ.150 கோடியில் அமைய உள்ளது. இப்பணிகள் 30 சதவீதம் முடிந்துள்ளன. கோரிப்பாளையம் பாலம் 1296 மீ.,க்கு ரூ.200 கோடியில் அமைய உள்ளது. இப்பணிகள் 15 சதவீதம் முடிந்துள்ளன. இப்பணிகளை இரவிலும் நடத்தி குறித்த காலத்திற்குள் முடிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அவற்றின் தரத்தை ஆய்வு செய்தோம்.இதுபோன்ற பணிகளுக்கு திட்ட மதிப்பீடு நிலம் எடுப்பு முடித்து மதிப்பீடு செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் அவ்வாறு செய்யாததால், பல பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வகையில் 70 பணிகள் பிரச்னைகளுடன் உள்ளன. இவற்றில் 30 பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். மதுரையில் நெல்பேட்டை - அவனியாபுரம்ரோடு விரிவாக்கப்பணிகளுக்கு திட்டமதிப்பீடு தயார் நிலையில் உள்ளது. தெற்கு வாசல் பாலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாநில அரசே நிதியை ஒதுக்கீடு செய்யும்.இந்த ரோட்டில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாகன போக்குவரத்து செறிவு இருந்தால்தான்ரயில்வேயும் நிதிபங்களிப்பு தரும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் சங்கீதா, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் சுகுமார், ஆனந்த் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை