உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

திருமங்கலம், : மாணவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், காய்ச்சலை தடுக்கவும் திருமங்கலம் நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் நகராட்சி தலைவர் ரம்யா வழங்கினார். கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னச்சாமி, மங்களகவுரி மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திருமங்கலத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என 28 பள்ளிகள் உள்ளன. நான்கு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு பள்ளியிலும் தினசரி நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என நகராட்சி தலைவர் ரம்யா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை