உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழுதடைந்த கட்டடத்தை பராமரிக்க ஆளில்லை

பழுதடைந்த கட்டடத்தை பராமரிக்க ஆளில்லை

மதுரை: மதுரை பனையூரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் சிதிலமடைந்து வருகிறது.இங்கு அப்பகுதி கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். புதன் கிழமைகளில் தடுப்பூசி போடுவதற்கும், பரிசோதனை, சிகிச்சைக்கு வருகின்றனர். வியாழன்தோறும் பள்ளி மாணவியருக்கு சத்துமாத்திரைகள், நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. வெள்ளிதோறும் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.இதனால் இம்மையத்திற்கு தினமும் ஆட்கள் வந்து செல்வர். பழமையான இக்கட்டடம் சிதிலமடைந்து வருவதால் கர்ப்பிணிகள், மாணவிகள் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இங்குள்ள ஊழியரும் இங்கு தங்கி இருக்க முடியாமல் வெளியேறிவிட்டார். கட்டடத்தை பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. விபரீதம் நடக்கும் முன் கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை