உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது

தண்ணீர் பிடிக்கும் பிரச்னையில் ஒருவர் கொலை; தாய், மகன் கைது

திருமங்கலம் : கூடக்கோவில் கட்டடத் தொழிலாளி கண்ணன் 40. இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்கள் குடும்பத்திற்கும், எதிர் வீட்டைச் சேர்ந்த சரத்குமார் 28, குடும்பத்திற்கும் சில மாதங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அன்றுமுதல் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, வாய்த் தகராறு, கைகலப்பு இருந்து வந்தது. கூடக்கோவில் போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்தனர்.நேற்று முன்தினம் மாலை கண்ணன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது சரத்குமார், அவரது தாயார் லட்சுமி 50, தகாத வார்த்தையால் கண்ணனை திட்டினர். கண்ணன் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து கண்ணனின் சகோதரர் சசிகுமார் கூடக்கோவில் போலீசில் நேற்று புகார் அளித்தார். இரவு 9:30 மணிக்கு மீண்டும் தகராறு செய்து கண்ணனையும், தடுத்த சகோதரர் சசிகுமாரையும் சரத்குமார் கத்தியால் குத்தினார். கண்ணன் இறந்தார். தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை