உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருச்சியை சுற்றிச்செல்லும் ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில்; பயண நேரம், கட்டணம் அதிகம்

திருச்சியை சுற்றிச்செல்லும் ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில்; பயண நேரம், கட்டணம் அதிகம்

மதுரை: மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் திருச்சியை சுற்றிச் செல்வதால் பயண நேரம், கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு ஆரஞ்ச் வண்ணத்தில் வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில் திருச்சிக்கு காலை 7:15க்கு செல்கிறது. அங்கிருந்து 7:20 மணிக்கு புறப்பட்டு காலை 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனுக்கு சேருகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம் 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஜூன் 17) அதிகாலை 5:15 மணிக்கு நடக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில்நிறுத்தம் இல்லை. மேலும் திருச்சியை சுற்றிச் செல்வதால் துாரம் 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும்,கட்டணமும் அதிகம் உள்ளது. எனவே திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயிலை திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும்.இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான திண்டுக்கல், ஓசூரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SRINIVASAN R
ஜூன் 17, 2024 17:59

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு தற்போதுள்ள மைசூரு எக்ஸ் பிரஸ் தவிர ஓர் விரைவு ரெயில் அவசியம் தேவை திருச்சி டு சென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை திருச்சி டு பெங்களூருக்கும் கொடுக்க வேண்டும். இதுவரை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் இதை தாமகவே செய்திருக்க வேண்டும். இருப்பினும் மாண்புமிகு பிரதமர் திரு மோடி அய்யா அவர்களும், திருச்சியை சேர்ந்த மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திருச்சிடு பெங்களூருக்கு தேவையை கருத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும்


V HARITHEERTHAM
ஜூன் 17, 2024 14:18

WE THE RESIDENTS AND TRAVELLING PUBLIC OF TIRUCHIRAPPALLI ARE VERY MUCH THANKFUL TO THE DECISION OF THE SOUTHERN RAILWAY TO RUN A DAY TIME SUPER FAST VANDE BHARATH TRAIN BETWEEN MADURAI AND BANGALORE VIS TIRUCHIRAPPALLI.


siva
ஜூன் 17, 2024 14:03

திருச்சிக்கு பதில் இந்த ரயில் நாகர்கோவில் மற்றும் பெங்களூர் இடையே இயக்கலாம். நாகர்கோவில் டு சென்னை-ஐ விட நாகர்கோவில் டு பெங்களூர் 70 கிமீ தூரம் குறைவு.


venugopal s
ஜூன் 17, 2024 13:19

நமது ரயில்வே துறை எதையுமே உருப்படியாக செய்ய மாட்டார்களா?


S Dhanapal
ஜூன் 17, 2024 11:58

மதுரை To பெங்களூர் ரயில் சேலம், தர்மபுரி ஓசூர் வழியே KSR Bangalore க்கு செல்ல உகந்தது. SMVT க்கு செல்வது பயணி க்களுக்கு மிகவும் கடினமாய் உள்ளது.


Sathiesh
ஜூன் 17, 2024 11:12

திருச்சி சுற்றி செல்வது வேஸ்ட். அதற்கு பதிலாக தூத்துகுடி-பெங்களூர், மற்றும் கும்பகோணம் - பெங்களூர் என இரு வண்டிகள் விடலாம்.


R Hariharan
ஜூன் 17, 2024 09:44

இன்னும் ரயில் சேவை தொடங்க வில்லை. மேலும் இந்த தடத்தில் எக்ஸ்பிரஸ் அல்லது அதி விரைவு ஸ்பிரெஸ் விட்டால் நல்லது. செங்கோட்டை பெங்களூரமைசூரு ரயில் சேவை கட்டாயம் வேண்டும். நாகர்கோவில் பெங்களூரு எப்பொழுதும் டிமாண்ட். மிசோரி தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மதுரைக்கு 6 அல்லது 630 வரஆணும் அப்படி வந்தால் மதுரை செங்கோட்டை பஸ்சேன்ஜ்ர் பிடிக்க வசதியாக இருக்கும்.


Rajendra kumar
ஜூன் 17, 2024 08:50

ஓசூர் முக்கியமான மாநகரம்தான்.


S Dhanapal
ஜூன் 17, 2024 12:00

மிகவும் உண்மை. ஓசூர் சிறப்பான தொழில் நகரமாய் மாறிவிட்டது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 17, 2024 06:37

ஓசூரு வழித்தடத்தினை இருவழிப்பாதையாக மாற்றினால் மட்டுமே சரியாக இருக்கும்


முக்கிய வீடியோ