வீட்டில் திருட்டு
மதுரை: ஒத்தக்கடை தென்றல் நகர் பாலமுருகன் 58. மகள் வீட்டிற்கு சென்ற நிலையில், இவரது வீட்டினுள் புகுந்த மர்மநபர் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர். லாரி மோதி பெண் பலி
மதுரை:ஆலாத்துார் யோகிராம் நகர் கார்மேகம் 60. நேற்றுமுன்தினம் மனைவி கமலாவுடன் 55, டூவீலரில் சென்றார். கடச்சனேந்தல் ரோடு அருகே லாரி மோதியதில் கமலா இறந்தார். டிரைவர் அலங்காநல்லுார் பாண்டியிடம் ஊமச்சிக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆசிரியர் வீட்டில் திருட்டு
அலங்காநல்லுார்: பூதக்குடி வாகைகுளம் நியூ விகாஸ் நகர் ரங்கராஜ் நகர் சக்திவேல் பாண்டியன் மனைவி சுப்புரத்தினம் 54. சின்ன ஊர்சேரி அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் காலை கணவர், மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று மாலை திரும்பினர். மாலை வீட்டின் கதவு பீரோ உடைக்கப்பட்டு 22 பவுன் நகைகள் திருடு போனது தெரிந்தது. அதேபோல் அப்பகுதி மருந்து விற்பனை பிரதிநிதி பாண்டியராஜன் 34, வீட்டில் ஒரு பவுன் நகை திருடு போயிருந்தது. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற 2 பேர் கைது
பேரையூர்: உசிலம்பட்டி சாலையில் பெருங்காமநல்லுார் விலக்கில் போலீசார் ரோந்து சென்றனர். கஞ்சா விற்றதாக அயோத்திபட்டி ராசாக்கொடி 58, மதுரை முனிச்சாலை அமுதாவை 40, கைது செய்து 21 கிலோ கஞ்சாவை சேடப்பட்டி எஸ்.ஐ., கருப்பையா பறிமுதல் செய்தார். கஞ்சாவுடன் பெண்கள் கைது
உசிலம்பட்டி: வடுகபட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்.ஐ., பொன்னுச்சாமி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வடுகபட்டி வளர்க்கொடி 33, மதுரை வாழைத்தோப்பு கீர்த்தனா 24, ஆறுமுகத்தம்மாள் 48, ஆகியோரை சோதனையிட்டபோது 3 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.