உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ரூ. 1.50 லட்சம் திருட்டு

திருமங்கலம்: ஆஸ்டின்பட்டி அருகே வேடர்புளியங்குளம் சக்தி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 44. ஓட்டல் ஊழியரான இவரது கணவர் மதுரமுத்து மரவேலை செய்கிறார். நேற்று முன்தினம் தம்பதியர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், இரவு 8:00 மணிக்கு மதுரமுத்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் பூட்டு சேதமடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 1.50 லட்சம் திருடு போனது தெரிந்தது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

பூஜை அறையில் கஞ்சா

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகையாபுரம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விஜயராஜன் என்பவர் ஆடம்பர பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து உருவாக்கிய பூஜை அறையை சோதனையிட்ட போது 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. பதுக்கலுக்கு உதவியாக இருந்த அப்பகுதி பாரதியார் தெரு பிரபுவை 39, போலீசார் கைது செய்தனர். விஜயராஜனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !