உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரதமர் நிகழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி

பிரதமர் நிகழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை: பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 வது தவணைத் தொகை வழங்கும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி மதுரையில் விவசாயிகளுக்கு காணொலி மூலம் திரையிடப்பட்டது.மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பார்த்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேசுகையில், ''விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய அரசு பல திட்டங்கள் மூலம் உதவி செய்கிறது. கிசான் நிதி திட்டம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் போது அதை விவசாய செலவிற்கு பயன்படுத்த முடிகிறது. இடைத்தரகர்கள் இல்லாத பண பரிமாற்றம் மூலம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுகின்றனர்'' என்றார். பேராசிரியை நிர்மலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை