உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கோடை துவங்கும்போது மழை

மதுரையில் கோடை துவங்கும்போது மழை

மதுரை; மதுரையில் கோடை துவங்கும் நேரத்தில் 2 நாட்களாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளதால் வெயில் கொடுமை தணிந்துள்ளது.பிப்ரவரி முடியும்போது மார்ச் துவங்கி மே வரை கோடை காலம் தொடரும். இந்த 3 மாதங்களும் வெயில் மக்களை வறுத்தெடுத்து விடும். இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் 2 நாட்களாக மாலையில் மேகமூட்டம் உருவாகி மதுரையை நிழல் போர்வையால் போர்த்தியுள்ளது. இதனால் வெம்மை தணிந்துள்ளது.கடந்த 2 மாதங்களாக வறட்சியான வானிலை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெயில் துவங்கி, வெப்பம் அதிகரித்து வந்தது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் சிவபாலன் கூறுகையில், ''சில தென்மாவட்டங்களில் மார்ச் 6 வரை லேசான மழைப் பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் உள்ளது. அருகில் உள்ள மதுரையிலும் அதன் அறிகுறியாக லேசான மழை பெய்துள்ளது. பொதுவாக மேகமூட்டமாக உள்ளது'' என்றார்.நேற்று முன்தினம் மதுரை வடக்கில் 9.4 மி.மீ., தல்லாகுளம் 11, விரகனுார் 3, சிட்டம்பட்டி 12.6, கள்ளந்திரி 7, மேலுார் 10.3, விமான நிலையம் 1.7, திருமங்கலம் 3.4, பேரையூர் 7.6, எழுமலை 0.4, கள்ளிக்குடி 3.6 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 22.4 மி.மீ., பிப்ரவரியில் 13 மி.மீ., அளவிலும் மழை பெய்துள்ளது. இந்தாண்டு அதே ஜனவரி, பிப்ரவரியில் நேற்றுதான் மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
பிப் 27, 2025 20:49

மதுரையில் சாலை விபத்துகள் அதிகம் -மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது, மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப் பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்பாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன, கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது, இப்பொழுது மழை காலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை