அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தி.மு.க., சார்பில் உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, மேற்கு, செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுடனும், நகர் நிர்வாகிகளுடனும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. உசிலம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், செல்லம்பட்டி சுதாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றினர்.