உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போராட்டங்களில் பங்கேற்க ஓய்வு பேராசிரியர்கள் முடிவு

போராட்டங்களில் பங்கேற்க ஓய்வு பேராசிரியர்கள் முடிவு

மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. பேராசிரியர் வீ.ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி அறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியர்கள் கூடலிங்கம், வள்ளி, சேதுராக்காயி, கோமதி உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கினர்.'இலங்காயத் திராவிட சமயமும், சில கட்டுரைகளும்' என்ற தலைப்பில் வி.சுவாமி நாதன் எழுதிய நுாலை கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் (ஓய்வு) கூடலிங்கம், பாஸ்கரன் வெளியிட, பேராசிரியர் பார்த்தசாரதி பெற்றார். பேராசிரியர் குணவதி உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து கவலை தெரிவிப்பதுடன், இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைமை நடத்த உள்ள கடித இயக்கம், தலைநகரில் ஆர்ப்பாட்டம், 8 வது ஊதியக்குழு அமைக்க வலியுறுத்தி நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றினர். பேராசிரியர் வி.பெருமாள் நன்றி கூறினார். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சுப்ரமணி, செந்தில்குமார், சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை