மேலும் செய்திகள்
குன்றத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி
12-Mar-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், ஆவுடை நாயகி, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன் எழுந்தருளினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yhl7bga1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு கோயில் ஓதுவரால் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டன. தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.
12-Mar-2025