உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் சாதனை

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) பி.காம்., மாணவர்கள் ஆனந்தி, அருள் சிவநந்தினி, அஷ்விகா, விக்னேஷ் ஆகியோர் உலக அளவிலான அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் சர்ட்டிபைடு அக்கவுண்டன்ட்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.உலகளவில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இத்தேர்வு ஏ.சி.சி.ஏ., நடத்துகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுவர். இதில் 30 சதவீதம் அளவிலேயே மாணவர்கள் தேர்ச்சி இருக்கும். ஜூனில் நடந்த இத்தேர்வை எழுதியவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் எஸ்.எல்.சி.எஸ்.,யை சேர்ந்த இந்த 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். இவர்களை முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் செல்வராஜ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்