உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எந்தளவு துணிந்து செயல்படுகிறோமோ அந்தளவு லாபத்தை ஈட்டமுடியும் கருத்தரங்கில் பேச்சு

எந்தளவு துணிந்து செயல்படுகிறோமோ அந்தளவு லாபத்தை ஈட்டமுடியும் கருத்தரங்கில் பேச்சு

மதுரை: மதுரை புதுார் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில், மதுரையர் இயக்கம், டெட்கோ சார்பில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இயக்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். நிர்வாகி விஜயராகவன் வரவேற்றார். முகாமில் பல்வேறு புதிய தொழில் வாய்ப்புகள், முதலீட்டு வாய்ப்புகள், கடன் வசதிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.தபோவன் குழுமத் நிறுவனர் தீனதயாளன் பேசியதாவது:கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் தேவையை வைத்தே தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எனவே தொழில் முனைவோர் இக்காலத் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்பட்டால் தொழிலில் வளரலாம். இன்றைய காலகட்டத்தில் அரசின் மூலம் பெறும் 50-70 சதவீத கடனுதவிகளை என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்டார்ட் அப்கள் தவிக்கும் நிலை உள்ளது. பணி மூலதனம் இருந்தால் தான் தொழிலில் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை துாக்கி ஏறிந்தால்தான் தொழிலை வளர்க்கும் புதிய யோசனைகள் பிறக்கும். எந்தளவு துணிந்து செயல்படுகிறோமோ அந்தளவு லாபத்தை ஈட்டமுடியும். தமிழகத்தில் விவசாய பொருட்களின் விளைச்சல் குறைந்து கொண்டே வருவதால் விரைவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. எனவே இங்கேயே விளைச்சலை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாயம் செய்யும் முறையில் தான் நஷ்டம் ஏற்படுகிறதே தவிர விவசாயத்தில் நஷ்டம் ஏற்படாது என்றார்.இயக்கத்தின் கல்விக்குழு மூலம் வசதியின்றி படிப்பை தொடரமுடியாத பள்ளி மாணவர்களுக்கு நிர்வாகி ரவிசங்கர் உதவித்தொகை வழங்கினார். நிர்வாகி முத்து, டெட்கோ துணைத் தலைவர் ராஜமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !