உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரையில் ரயில்வே பணியாளர்களுக்கு உயர்த்திய, நிலுவையில் உள்ள அலவன்சுகளை வழங்க வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ., பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், ஓடும் தொழிலாளர் பிரிவில் காலி இடங்களை நிரப்பி, பணிச்சுமையை குறைக்கவும் வேண்டும். ஓடும் தொழிலாளர்களின் வேலைப் பளுவை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.மதுரை எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர் பிரிவு உதவிக் கோட்ட செயலாளர்கள் நாகராஜ்பாபு, விஜய், கருப்பையா, முத்துக்குமார், நித்யராஜ், ராம்குமார், ரபீக் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி