உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்டார்ட் அப் விழிப்புணர்வு

ஸ்டார்ட் அப் விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம், : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் அக்ரோ புட் சேம்பர் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவன மதுரை மண்டலம் சார்பில் அறிவியல் பிரிவின் இறுதியாண்டு மாணவர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, புதிய தொழில் நிறுவனம் துவக்குவது குறித்த ஸ்டார்ட் அப் வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். ஸ்டார்ட் அப் நிறுவன மண்டல திட்ட மேலாளர் வினோத் ராஜேந்திரன், பைபி தகவல் தொழில்நுட்ப நிறுவன முதன்மை செயல் அலுவலர் சிரஞ்சீவி, கல்லுாரி உணவியல் துறை தலைவர் கோபிமணிவண்ணன் பேசினர்.ஸ்டார்ட் அப் தொடங்க 25 மாணவர்கள் பதிவு செய்தனர். மாணவ பொறுப்பாளர்கள் பவித்ரா, ராகுல், ராகவன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை