மதுரை: சேலத்தில் நடந்த மாநில ஓபன் கராத்தே போட்டியில் மதுரை ஜி தொக்குக்காய் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பை, சைக்கிள் வென்றனர்.கட்டா பிரிவில் ஜீவிதா, கவின் நரசிம்மன், யோகேஷ், ஹரிஷ் பாண்டி, அபிநவ், கணேஷ்ராம், ஸ்ரீ ஸ்ரேவன், பவானி, ராம் யுகேஷ், முபித் முகமத், கவின்கண்ணா, ஹர்ஷன், ஜீவிதா சக்திவேல் முதல் பரிசு பெற்றனர். யாத்ரா, அஸ்வந்த், ஆதில், திவ்யதர்ஷன், ஸ்ரீசித்நாதேஷ், சாருநேத்ரா, மித்ராஸ்ரீ, பூர்விகா, யாழினி 2ம் பரிசு பெற்றனர். நந்திதா, யாழ்வேந்தன், லக்ஷிதா, சித்தார்த், ஹரிச்சரண், தக்ஷின், எப்ரான், சஞ்சீவ், வருண் முத்தையா, அருள் டெர்வின், ஜெயமித்ரா, தருண், விக்ராந்த், அருள் டார்வின், நிகிதா, ஜெய்தா, ருஜுலா 3 ம் பரிசு பெற்றனர். சண்டை பிரிவில் சித்தார்த், யாழ், ஜீவிதா முதல் பரிசும், யோகேஷ், அபிநவ் சிதம்பரம், ஹரிச்சரண், ரூபதர்ஷன், ஜெய்தா 2 ம் பரிசும் யுவன் கருணேஷ், கணேஷ்ராம், திவ்யதர்ஷன் 3 ம் பரிசும் வென்றனர்.பள்ளி தேசிய தலைவர் தியாகராஜன், பொதுச் செயலாளர் முத்துராஜு, உலக கராத்தே நடுவர்கள் சரவணன், காளீசன், சந்தானகிருஷ்ணன், கணேஷ், பயிற்சியாளர்கள் சந்தோஷ்குமார், கார்த்திகேயன், கேசவன் பாராட்டினர்.