உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்கள் விழிப்புணர்வு

மாணவர்கள் விழிப்புணர்வு

மேலுார்: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவிகள் பதினெட்டாங்குடியில் வளர்ப்பு முறை, காளான் படுகை தயாரிப்பு, காளான் தொழில்முறை, நுட்பங்கள், அறுவடைசார் பதப்படுத்துதல் குறித்து மக்களுக்கு பயிற்சி அளித்தனர்.மேலுார் குழு மாணவர்கள் ஜெயசூர்யா, ஜெய்டன் தலைமை வகித்தனர். சாம்ராயன், மோஹித் சோலாங்கி, முகுந், நவீன், பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். சகாப்தின், சரண்குமார், சத்தியநாராயணன், விஷ்ணு பிரசாத் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பண்ணை வேளாண் முறையில் அதிகளவு வருமானம் ஈட்டுவது மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, ஊராட்சி தலைவி சுதா, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி

மாணவிகள் காவியலட்சுமி, ஜெயதுர்காதேவி, அபிநயா, மரியஆன்சி, ராகவி, லாவண்யா, சர்மிலி கிராம தங்கல் திட்டத்தில் வாடிப்பட்டி ஒன்றியத்தில் பயிற்சி மற்றும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போடிநாயக்கன்பட்டி தென்னந்தோப்பில் கருத்தலை பூச்சி மற்றும் காண்டாமிருக வண்டின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேர் ஊட்டம் முறையை விவசாயிகளுக்கு செயல் முறையில் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ