உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.5 மகிழ்வில்லாத தினமாக அனுசரிக்க ஆசிரியர்கள் தீர்மானம்: கருப்பு பேட்ஜ் உடன் பணியாற்ற முடிவு

செப்.5 மகிழ்வில்லாத தினமாக அனுசரிக்க ஆசிரியர்கள் தீர்மானம்: கருப்பு பேட்ஜ் உடன் பணியாற்ற முடிவு

மதுரை : மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் 'பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்.,5 ல் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை 'மகிழ்வில்லாத தினமாக' ஆசிரியர்கள் அனுசரிக்க வேண்டும்' என அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டம் சங்கத் தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்து தீர்மானம் குறித்து பேசினார்.மாநில பொருளாளர் கார்த்திகேயன் பேசியதாவது:தமிழக அரசு இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் 'ஒன் டைம் செட்டில்மெண்ட்' ஆக பணிக்காலம் முடிந்த பின் எவ்வித ஓய்வூதியமும் தராமல் ஏமாற்றி வருகிறது.இதை உடனடியாக திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தது போல் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி இந்தாண்டு ஆசிரியர் தினத்தில் 'மீண்டும் வேண்டும் பழைய பென்ஷன் திட்டம்' என்ற வாசகத்துடன் கருப்பு பேட்ஜ் அணிந்து செப்.,5ல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.மாலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.இதில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை