உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும் தாமல் ராமகிருஷ்ணன் பேச்சு

பக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும் தாமல் ராமகிருஷ்ணன் பேச்சு

மதுரை: ஒருவன் பிறப்பால் அல்லாமல் பக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையை அடையமுடியும் என சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் பேசினார்.மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ஸ்ரீமந் நாராயணீயம் சொற்பொழிவுநடந்தது.அதில் அவர் பேசியதாவது:ஸ்ரீமந் நாராயணீயம் பாகவதத்தின் சாரம். பாகவதம் பழம் என்றால் நாராயணீயம் பழச்சாறு. அதனை இயற்றியவர் நாராயண பட்டத்திரி. அவர் தனது குருவிடம் இருந்து வாத நோயை பெற்றுக் கொண்டார். ஒருவன் தன் கர்வத்தை கடவுளிடம் கூட காட்டலாம். ஆனால் குருவிடம் காட்டக் கூடாது. வாத நோயின் வீரியத்தால் எழுத்தச்சன் என்னும் ஜோதிடரிடம் சென்றார். அவர் 'வியாதி குணமாககுருவாயூர் சென்றுநாக்கில் மீனைத் தொட்டு குருவாயூரப்பனைபாடுங்கள்'என்றார்.அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொண்ட பட்டத்திரி, விஷ்ணுவின் மச்சாவதாரம் தொடங்கி கிருஷ்ணாவதாரம் வரை 100 நாட்கள் தொடர்ந்துநாராயணீயம் பாடத் தொடங்கினார்.ஒருவர் கஷ்டம் ஏற்படும் போது தான் கடவுள் நாமத்தை ஜெபிப்பார். குருவாயூரில் துலாபாரம் கொடுப்பதன் நோக்கம், எவ்வளவு பொருள் கொடுக்கிறோம் என்பதல்ல. மனதில் எவ்வளவு பக்தி உள்ளது என்பதை குருவாயூரப்பன் சோதிக்கிறார். தன் பக்தனிடம்பக்தியைத் தவிர வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை. மனதில் பக்தியுடன் பூ, இலை, பழம் அல்லது அவரைகண்டதும் பரவசத்தில் கண்களில் பெருகும் கண்ணீர் என்னும் தீர்த்தத்தையே அவர் விரும்புகிறார்.குருவாயூர் சென்று அவர்முன் நின்று அவர் பார்வை நம்மீது பட்டாலே போதும். நமக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து, நமக்கு எது நல்லதோ அதை அவரேவழங்குவார்.இனிப்பை உணர மட்டுமே முடியும்.அதுபோல் குருவாயூரப்பனை அறிந்து கொள்ள முடியாது. உணர மட்டுமே முடியும். நாராயணன் 108 திவ்ய தேசங்களில் இருக்கிறார் என்கிறோம். 109 வது திவ்ய தேசமாக நம் மனதிலும் இருக்கிறார். அதற்கு பிரகலாதன் ஓர் உதாரணம்.கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவுக்கு 8 ம் மாதத்தில் மூளையை இறைவன் படைக்கிறார். அதனால் தான் வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். 8, 9 மாதங்களில் நல்ல விஷயங்களை மட்டும்கர்ப்பிணிகேட்டு வந்தால் அவளது குழந்தை தெய்வீககுணங்களுடன் பிறக்கும். ஹிந்து தர்ம நம்பிக்கைக்கு பிரகலாதனே சாட்சி.ஒருவன் உயர்ந்தகுலத்தில் பிறந்ததால் அவனை உயர்ந்தவன் எனவும் அசுர குலத்தில் பிறந்ததால் அவன் தாழ்ந்தவன் எனவும் கருதமுடியாது. பிறப்பால் அல்ல உயர்வு.பக்தியாலும் ஞானத்தினாலும் ஏற்படுவதே உயர்வு.இவ்வாறு பேசினார்.இன்றும் நாளையும் மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவுதொடர்கிறது. ஸத்குரு ஸங்கீத ஸமாஜத்தின் ராஜாராம், வெங்கடநாராயணன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ