உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாகன நுழைவு புதிய கட்டணத்தை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு

வாகன நுழைவு புதிய கட்டணத்தை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு

அவனியாபுரம் : 'விமான நிலையத்தில் புதிய வாகன கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய தவறினால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்,' என மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.விமான நிலைய வாகன நுழைவுக் கட்டண வசூல் உரிமை பெற்ற நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. புதிதாக ஆஞ்சநேயா ஏஜென்சி மூலம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஏஜென்சி கட்டணங்களை மாற்றியது. புதிய கட்டண பிரச்னையால் கட்டணம் வசூலிக்கும் வட மாநில பணியாளர்களுக்கும் கார் டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.நேற்று மதுரை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுனர்கள் விமான நிலைய இயக்குனரிடம் தனியார் மற்றும் வாடகை வாகனங்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் கூறியதாவது:தனியார் வாகனங்களுக்கு ரூ. 30, வாடகை வாகனங்களுக்கு ரூ.135 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக டில்லி அலுவலகத்தில் பேசி முடிவெடுப்பதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.அதுவரை நாங்கள் தனியார் வாகனங்கள் கொடுக்கும் ரூ. 30 கட்டணத்தை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம்.தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பதால் நான்கு நாட்களுக்குள் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை