அதிகாரிகள் வராததுதான் குறையாம் ; கூட்டத்தில் குன்றத்து விவசாயிகள் வருத்தம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. துணைத் தாசில்தார் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.விவசாயிகள் சிவராமன், பாண்டி, மகேந்திரன், லட்சுமணன், கிழவன் சாமி, மாரிச்சாமி பங்கேற்றனர். விவசாயிகளுக்கான பிரதமரின் உதவி திட்டம், தென்பழஞ்சி கண்மாயில் தனியாருக்காக ரோடு அமைத்தது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்துவிட்டு புறப்பட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''டி.ஆர்.ஓ., நடத்திய கூட்டத்திற்கு சென்றதால் இக்கூட்டத்திற்கு தாசில்தார் வரவில்லை. மற்ற துறை அதிகாரிகளிலும் பெரும்பாலோர் வரவில்லை. கடந்த கூட்டத்தில் நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு பதிளிக்க அதிகாரிகளே இல்லை. இன்றைய கூட்டம் பெயரளவுக்கு மட்டுமே நடந்தது. பெரும்பாலான விவசாயிகளுக்கு கூட்டம் நடைபெறும் தகவலே கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகளும் பெருமளவு பங்கேற்கவில்லை என்றனர்.